செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் பகுதியில் இயங்கி வரும் விர்கோ பாலிமர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பெரிய அளவிலான பாலித்தீன் பைகள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.
1992 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் 90 நிரந்த பணியாளர்கள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில். இந்நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக நிரந்த பணியாளர்களுக்கு மாதம், மாதம் வழங்கப்படும் ஊதியம் முறையாக வழங்கப்படாமல்,
இரண்டு அல்லது மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வந்ததாகவும், கடந்த மாதம் வழங்க வேண்டிய ஊதியம் 15 நாட்களுக்கான ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும்,
இது குறித்து பணியாளர்கள் நிறுவனத்தில் முறையிட்டு எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சிய போக்காக பதில் கூறியதால்,
பணியாளர்கள் லேப்பர் கோர்ட் அனுகிய நிலையில், கமிஷ்னரின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிட்டதையும் மீறி நிர்வாகம் அலட்சியப்போக்காக செயல்பட்டு ஊழியர்களுக்கு பணி வழங்குவதையும் மறுப்பதாக கூறி 90 நிரந்தர பணியாளர்கள் இன்று நிறுவனத்தின் நுழைவு வாயில் பணி வழங்க வேண்டியும், ஊதியம் முறையாக வழங்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.