தாம்பரம் ரயில் யார்டு ரூ. 10 கோடியில் மேம்பாடு

81பார்த்தது
தாம்பரம் ரயில் யார்டு ரூ. 10 கோடியில் மேம்பாடு
தாம்பரம் நிலையத்தில் உள்ள ரயில்வே யார்டில், 10 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இதனால், கூடுதல் ரயில்களை இயக்க முடியும் என சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிற மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்து தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே, ரயில்களை இயக்கி வரும் சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் முனையங்களில் இடநெருக்கடி ஏற்படுகிறது.

இதனால், தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. புறநகரில் முக்கிய ரயில் நிலையமாக இருப்பதால், இங்கு வந்து செல்லும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 2. 30 லட்சத்தை தாண்டியுள்ளது. இருப்பினும், பயணியருக்கான அடிப்படை வசதிகள் போதிய அளவில் மேம்படுத்தவில்லை என பயணியர் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

இதையடுத்து, கூடுதல் ரயில்களை இயக்க, தாம்பரம் ரயில்வே யார்ட்டில் மேம்பாட்டு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.

தொடர்புடைய செய்தி