சேதமான சாலையில் மழைநீர்  ஓரிக்கையில் டெங்கு அபாயம்

973பார்த்தது
சேதமான சாலையில் மழைநீர்  ஓரிக்கையில் டெங்கு அபாயம்
காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை எஸ். டி. , அப்பாவு நகர், வரசித்தி விநாயகர் கோவில் அருகில், தார்ச்சாலை பாதியளவு சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அதில், மழைநீர் குட்டைபோல தேங்குவதால், 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தியாகி ஓரிக்கையில் டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் உள்ளது. மேலும், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலை சேதமடைந்த பகுதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக சேதமடைந்த சாலையை, 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓரிக்கை, எஸ். டி. , அப்பாவு நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி