தீயில் கருகிய குடிநீர் தொட்டி தவிக்கும் குடியிருப்புவாசிகள்

584பார்த்தது
தீயில் கருகிய குடிநீர் தொட்டி தவிக்கும் குடியிருப்புவாசிகள்
அச்சிறுபாக்கம் அடுத்த கரசங்கால் ஊராட்சிக்குட்பட்ட குளக்கரை குடியிருப்பு பகுதியில், 5 ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆழ்துளை கிணறு, மின் இணைப்புடன் கூடிய குடிநீர் 'மினி டேங்க்' அமைக்கப்பட்டது.

அப்பகுதியில் சேகரமாகும் குப்பை, பள்ளி எதிரே உள்ள குடிநீர் தொட்டி அருகே கொட்டி எரிக்கப்படுவதால், குடிநீர் தொட்டி தீயில் கருகி சேதம் அடைந்துள்ளது. பள்ளி குழந்தைகள், குடியிருப்புவாசிகள் மற்றும் சாலையைப் பயன்படுத்துவோருக்கு, இந்த குடிநீர் தொட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

எனவே, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், குடிநீர் மினி டேங்கை மாற்றி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி