பாப்பநல்லூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பநல்லூர் கிராமத்தில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் செய்துள்ளனர்.
தற்பொழுது இந்த கிராமத்து விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்து தயார் நிலையிலும் மற்றும் விலை நிலங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.
எனவே இக்கிராமத்திற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் ஆனால் இதனால் வரை அக்ராமத்திற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வரவில்லை என அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே விவசாயிகளின் நலன் கருதி இக்கிராமத்திற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.