சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருக்கச்சூர், ஆப்பூர், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற் பட்ட கிராம மக்கள்இச்சாலையை பயன் படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் சிங்க பெருமாள் கோவில் பகுதி யில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் அடிக்கடி சிக்னல் கிடைக்காமல் பழுதடைந்தும், வாகனங்கள் மோதி உடைந்து விடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துவருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை ரயில்வே சிக்னல் கிடைக்காமலும், இரண்டு முறை வாகனம் மோதி கேட் உடைந்ததாலும் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாகஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் வாகனங்கள் சாலை நெடுகிலும் அணிவகுத்து நிற்கின்றன.
இதுகுறித்து வாகனஓட்டிகள் கூறியதாவது:
ரயில்கள் சென்று 10 முதல் 15 நிமிடங்கள் ஆன பின்னரே ரயில்வே கேட் திறக்கப்படுகிறது. மற்ற ரயில்வே கேட்களைரயில்கள் கடந்தஉடனேயே திறக்கின்றனர்.
ரயில்வே ஊழியர்கள் முறையாக பதில் அளிக்காததால், நீண்ட நேரம் காத் திருக்கும் வாகன ஓட்டிகளிடையே வீண் சண்டைகளும், குழப்பங்களும் ஏற்படுகின்றன. எனவே, இந்த ரயில்வே கேட் பிரச்னைக்கு தீர்வு காண, ரயில்வே துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.