ஏர்போர்ட்டிற்கு எதிர்ப்பு ஏகனாபுரத்தில் 'கட் அவுட்'

78பார்த்தது
ஏர்போர்ட்டிற்கு எதிர்ப்பு ஏகனாபுரத்தில் 'கட் அவுட்'
சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் புதிதாக அமைய உள்ளது. இதற்காக, பரந்துார் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில், 5, 400 ஏக்கர் தேவை. அதில், 3, 750 ஏக்கர் தனியார் வசம் உள்ளது; மீதி அரசுக்கு சொந்தமான நிலம்.

பரந்துார் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம், தமிழகத்தில் இருந்து, ஆந்திரா மாநிலம் சித்துார் மாவட்டத்திற்கு, தஞ்சமடையப்போவதாக, ஏகனாபுரம் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தின் முன், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்றவர்களை சமீபத்தில் கைது செய்து விடுவித்தனர்.

ஏகனாபுரம் கிராமத்தில், எல்லையம்மன் கோவில் ஆடித் திருவிழா நடத்துவதற்கு, மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இதில், விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, 'கட் அவுட்' அமைத்து, எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இருப்பினும், இரவுப் போராட்டமும் தொடர்ந்து நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி