அரசு மாணவர் விடுதியில் 500 மரக்கன்றுகள் நடும் விழா

568பார்த்தது
அரசு மாணவர் விடுதியில் 500 மரக்கன்றுகள் நடும் விழா
பருவநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு, அடர்வனங்களை உருவாக்கும் வகையில், காஞ்சிபுரம் அடுத்த, பாலுசெட்டிசத்திரம், திருப்புட்குழி, அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி வளாகத்தில், 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும், பசுமை விழா நேற்று நடந்தது. பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு மற்றும் யங் இந்தியா அமைப்பு சார்பில் நடந்த இவ்விழாவிற்கு காஞ்சிபுரம் தி. மு. க. , ஒன்றிய குழு சேர்மன் மலர்கொடி தலைமை வகித்தார். இதில், விடுதி காப்பாளர் ஹேமலதா, திருப்புட்குழி ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மாணவ- - மாணவியர் காஞ்சிபுரம் கிராண்ட் நோட்டரி கிளப் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்று பல்வேறு நிழல், கனி தரும் மரக்கன்றுகள் நட்டனர். மேலும், 800 மரக்கன்றுகள் நடப்பட உள்ளதாக, பசுமை இந்தியா பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பசுமை மேகநாதன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி