காஞ்சியில் கடையின் பூட்டை உடைத்து மொபைல் போன்கள் திருட்டு

55பார்த்தது
காஞ்சியில் கடையின் பூட்டை உடைத்து மொபைல் போன்கள் திருட்டு
காஞ்சிபுரம் மாவட்டம் சிறீபெரும்புதூர் சேர்ந்தவர் பிரேம்குமார், 35. இவர், சிறீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே, ஆர்.கே., எனும் பெயரில் மொபைல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் (டிசம்பர் 26) இரவு 10:00 மணிக்கு, பிரேம் கடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது, ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 50க்கும் மேற்பட்ட மொபைல்போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த சிறீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கடையில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி