காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 338 முழு நேர நியாய விலை கடைகளுக்கான மேம்படுத்தப்பட்ட புதிய விற்பனை இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, விற்பனையாளர்களிடம் வழங்கினார்.
மேலும் இந்த புதிய இயந்திரத்தை கையாளும் முறை குறித்து ஒரு நாள் பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. இதில் குடும்ப அட்டை மூலம் பொது மக்களுக்கு எவ்வாறு பொருட்கள் வழங்குவது என்பதும் செயல்முறையில் எடுத்துக் காட்டப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் தாங்கள் பெறும் பொருட்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இயந்திரத்தின் மூலம் அளிக்கப்படும் ஒப்புகை சீட்டு வழங்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, கூட்டுறவுத்துறை பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் மணி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.