செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நல்லாத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பொம்மராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் கன்னியம்மாள் வயது 70 இவரது நல்லாத்தூர் ஊராட்சி பொம்மராஜபுரம் பகுதியில் தனக்கு சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி அதில் சிறிய அளவில் இட்லி கடை வைத்து அன்றாடம் இட்லி வியாபாரம் செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் இந்நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் சாப்பிடுவதாக வீட்டிற்குச் சென்ற முதாட்டி இரவு 9 மணி வரை கதவை திறக்காமல் மின் விளக்கு போடாமலும் இருப்பதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர் பாட்டியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டுள்ளனர் தொலைபேசி எடுக்காத நிலையில் பாட்டியின் பேரனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாட்டி அங்கே வந்துள்ளார்களா என கேட்டதற்கு இல்லை இங்கு வரவில்லை அங்கே தான் இருக்கிறார்கள் என்று பேரன் கூறியுள்ளார் வெளியே லைட் எரியவில்லையே என கேட்டதற்கு எனக்குத் தெரியவில்லை வீட்டில் உள்ளே போய் பாருங்கள் என பேரன் கூறியுள்ளார் இதனை அடுத்து பாட்டியின் வீட்டிற்கு சென்ற பக்கத்து வீட்டு பெண்மணி வீட்டின் கதவு வெளியே தாழ்ப்பொட்டு உள்ளதை கண்டு சந்தேகம் அடைந்து கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது மூதாட்டி கழுத்தில் காயத்துடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.