தமிழகம் முழுவதும் 38 நாட்கள் கழித்து திறந்த பள்ளிகள்.
மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் சீருடை வழங்கிய திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி.
தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதியிலிருந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 38 நாட்கள் கழித்து இன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்டது பள்ளி திறந்த இன்றைய தினமே மாணவ மாணவியருக்கு பாட புத்தகங்களும் சீருடை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமை செயலகத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கு சீருடைகளுடன் நோட்டு புத்தகங்கள் வழங்கியதை அடுத்து செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சீருடையுடன் நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை லதா தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி முன்னாள் எம்எல்ஏவும் தலைமை பொது குழு உறுப்பினருமான வீ தமிழ்மணி திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆர். டி அரசு திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் வட்டார கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம், புத்தகப்பை, சீருடைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.