சோகண்டியில் புதிய பள்ளி கட்டிடம் திறந்து வைத்த எம்எல்ஏ

59பார்த்தது
திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி ஊராட்சியில் 74. 50 லட்சம் மதிப்பில் நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடத்தை திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய சோகண்டி ஊராட்சியில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 74. 50 லட்சம் மதிப்பில் நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா சோகண்டி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி சரவணன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளர்களாக திருப்போரூர் எம்எல்ஏ எஸ் எஸ் பாலாஜி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றி வைத்தும் மாணவ மாணவியரின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தனர் நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஆர் கே ரமேஷ் தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வகுமார் பிடிஒக்கள் மீனாட்சி, பாஸ்கர் பள்ளி ஆசிரிய பெருமக்கள் ஊராட்சி மன்ற துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி