புரட்டாசி மாதம் இறைச்சி விலை குறையவில்லை

162பார்த்தது
புரட்டாசி மாதம் இறைச்சி விலை குறையவில்லை
காஞ்சிபுரத்தில் மீன் மொத்த விற்பனை மார்க்கெட் புதிய ரயில்வே நிலையம் அருகில் செயல்பட்டு வருகிறது. தவிர சின்ன காஞ்சிபுரம், கலெக்டர் அலுவலகம் அருகில் ஓரிக்கை, ஒலிமுகமதுபேட்டை என, பல்வேறு இடங்களில் சில்லரை மீன் விற்பனை செய்யப்படுகிறது.


ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த இடங்களில், மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து மீன் வாங்கி செல்ல வேண்டியிருக்கும். கடந்த மாதம் அனைத்து மதத்தினரும் மீன் இறைச்சி வாங்கினர்.

தற்போது ஒரு பிரிவினர் அசைவம் சாப்பிடுவதில்லை இருந்த போதிலும், கடந்த மாதம் சில்லரை விலையே இந்த பகுதிகளில் விற்கப்படுகிறது.

கடந்த மாதம் சில்லரை மீன் விற்பனை கடைகளில் 1 கிலோ வஞ்சிரம் மீன் 600 ரூபாய், மத்தி மீன் 200 ரூபாய், சங்கரா மீன் 300 ரூபாய், எறா மீன் 300 ரூபாய் விற்கப்பட்டன. கோழிகறி கிலோ 240 விற்கப்பட்டன.

அதே விலைதான் இந்த மாதமும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ''மீன் வரத்து குறைந்து விட்டது. ஆனாலும், விலை குறையவில்லை, '' என்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி