ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மாநாட்டில் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றிடவும், தமிழை வழக்காடு மொழியாக்கிடவும், உச்சநீதிமன்ற கிளை தமிழகத்தில் அமைத்திடவும் தீர்மானம் நிறைவேற்றம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
வழக்கறிஞர் பாதுகாப்பு மாநாடு தலைமை ஒருங்கிணைப்பாளர் SPC. மதன்ராஜ் தலைமையில் செயலாளர் ஆர். அய்யாவு முன்னிலையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பி. எஸ். அமல்ராஜ், கலந்துகொண்டு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு பற்றியும் உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றிடவும், சேம நல நிதி ரூபாய் 25 லட்சம் வழங்கிடவும், தமிழை வழக்காடு மொழியாக்கிடவும், உச்சநீதிமன்ற கிளை தமிழகத்தில் அமைத்திடவும் உள்ளிட்ட பல்வேறு 10 தீர்மானங்கள் வழக்கறிஞர்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டன. இதில் 1000 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.