காஞ்சிபுரம் அடுத்த, காவாந்தண்டலம் பகுதியில்பொதுப்பணித்துறை பராமரிப்பில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் செய்யாற்றில்வெங்கச்சேரி பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து தண்ணீர் செல்வதற்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த கால்வாய் ஆற்றின்ஓரமாக செல்கிறது. அந்தகால்வாய் தடுப்பு சுவரின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இரு ஆண்டுகளாக ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டும் தண்ணீர் செல்லவில்லை.
கடந்த ஆண்டு ஆற்றில்வெள்ளம் ஏற்பட்டது அப்போது கால்வாய் தடுப்பு சுவரில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டை கட்டி தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.
இருந்தும் தண்ணீர் செல்லவில்லை. தற்போது வடகிழக்கு பருவ மழைக்கு முன் அந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கால்வாய் தடுப்பு சுவற்றில் உடைப்பு இருக்கும் இடத்தில் மண்கொட்டி தற்காலிகமாக சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.