மின்கம்பியில் உரசும் மரக்கிளை அகற்ற வலியுறுத்தல்

74பார்த்தது
மின்கம்பியில் உரசும் மரக்கிளை அகற்ற வலியுறுத்தல்
காஞ்சிபுரம் தாட்டித்தோப்பு, வரதராஜா நெசவாளர் குடியிருப்பில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக பிரதான சாலையோரம், மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இச்சாலையில் உள்ள வீட்டின் அருகில் உள்ள வேப்ப மரத்தின் கிளைகள், மின் கம்பியில் உரசியபடி உள்ளது. இதனால், பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது மரக்கிளையில் மின்கம்பி உரசுவதால், தீப்பொறி பறக்கிறது.

இதனால், காற்றடிக்கும்போது இச்சாலை வழியாக செல்வோர் அலறியடித்து ஓட்டம் பிடிக்கின்றனர்.

எனவே, மின்விபத்து ஏற்படுவதற்குள் மின் ஒயரில் உரசும் மரக்கிளையை அகற்றுவதோடு, தாழ்வாக தொங்கும் மின்கம்பியை சீரமைக்க மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரதராஜா நெசவாளர் குடியிருப்பு பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி