மன்ற கூட்டத்தில் பா. ஜ. , கவுன்சிலருடன் தி. மு. க. , வினர் மோதல்

877பார்த்தது
மன்ற கூட்டத்தில் பா. ஜ. , கவுன்சிலருடன் தி. மு. க. , வினர் மோதல்
காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம் நேற்று, மேயர் மகாலட்சுமி தலைமையில் நடந்தது. இதில் துணை மேயர் குமரகுருநாதன், கமிஷனர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


சிந்தன் - அ. தி. மு. க. ,: எழுது பொருள் அச்சகத்திற்கு 20 லட்சம் ரூபாய் பாக்கி கொடுக்க வேண்டியிருக்கிறது. அதன் மேல் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் எப்படி அதற்கு அனுமதி கொடுத்தீர்கள்?

மேயர் மகாலட்சுமி: ஏற்கனவே கொடுக்கப்பட்ட அனுமதி.

சண்முகானந்தம் - அ. தி. மு. க. ,: கடைசி நேரத்தில் ஒரு பேப்பர் கொடுத்துள்ளனர். இதற்கு மேயர் பதில் அளிக்க வேண்டும்.

மேயர்: கடைக்கு டெண்டர் விடுவதற்கான நோட்டீஸ்.

சண்முகானந்தம் - அ. தி. மு. க,: 2, 000 ரூபாய் வாடகைக்கு இவ்வளவு தீவிரம் காட்டுகிறீர்கள். 30 லட்சம் ரூபாய் வருவாய் உள்ள பொது கழிப்பறைக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன். குப்பை எடுப்பதற்கு நியமிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் அவர்களை காட்ட முடியுமா. குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்பதற்காக புது டெண்டர் விடப்பட்டது.

இருந்தும் முன்பை விட மோசமாகத்தான் இருக்கிறது. இந்த மாதம் அவர்களுக்கு பில் கொடுக்க வேண்டாம்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி