பாதியில் விடப்பட்ட மழைநீர் கால்வாய் பணி

71பார்த்தது
பாதியில் விடப்பட்ட மழைநீர் கால்வாய் பணி
காஞ்சிபுரம் அடுத்த, பொன்னேரிக்கரை ஓரம், சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழி நெடுஞ்சாலை செல்கிறது.


தற்போது, ஆறுவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி மற்றும் பிரதான கடவுப்பாதைகளின் நடுவே, மேம்பாலங்கள் கட்டுமான பணி நடந்து வருகின்றன.

பொன்னேரிக்கரை சாலையில் இருந்து, ஏனாத்துார் மார்க்கமாக சாலை ஓரம், கான்கிரீட் மழைநீர் கால்வாய் கட்டும் பணி பாதியில் விடப்பட்டு உள்ளது. மேலும், தடுப்பு ஏற்படுத்தவில்லை. இதனால், சாலை ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், வேலுார், காஞ்சிபுரம் ஆகிய மார்க்கங்களில் இருந்து, சென்னைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கட்டி முடிக்கப்படாத கால்வாயில் தவறி விழும் நிலை உள்ளது.

எனவே, மழைநீர் வடிகால்வாயை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

நெடுஞ்சாலை விரிவாக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மழைநீர் வடிகால்வாய் நிறைவு பெறாத இடத்தில் மீடியன் தடுப்பு கல் வைத்திருந்தோம். அது விழுந்து விட்டது. மின்கம்பம் மாற்றி அமைத்த பின், மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி துவக்கப்படும்' என்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி