தண்டலம் கிராமத்தில் கங்கா ஆர்தி பூஜை

64பார்த்தது
மதுராந்தகம் அருகே ஒரு கிராமமே ஒன்று கூடி விசேஷமாக நடத்திய கங்கா ஆர்தி பூஜை

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தண்டலம் கிராமத்தில் வடமேற்கு மூலையில் ஏரி அமைந்துள்ளதால் அந்த கிராமத்திற்கு வாஸ்து பிரச்சனை உள்ளதெனக் கூறி அந்த கிராமமே ஒன்று கூடி கங்கா ஆரத்தி பூஜை நடத்தினர்

தண்டலம் கிராமத்தில் உள்ள லக்ஷ்மி நாராயணர் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து கலசங்கள் புறப்பட்டு கிராமத்தை வளம் வந்து கங்கையின் அருகே அமர்ந்து சிவாச்சாரியர் முன்னிலையில் கங்கா தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அந்த ஏரியில் புனித நீர் ஊற்றினர் அதன் மூலம் தங்கள் கிராமத்திற்கு தோஷங்கள் நிவர்த்தி ஆகும் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்

இந்த கங்கா ஆர்த்தி பூஜையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அனேக மக்கள் கலந்து கொண்டனர், காசியில் நடத்தப்படும் கங்கா ஆர்த்தி விசேஷ பூஜை ஒரு சிறு கிராமத்தில் நடத்துவது இதுவே முதன் முறையாகும் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி