செங்கையில் அரசு ஓட்டுனர் உரிமையில் பேசுவதாக பெண்பயனி புகார்

51பார்த்தது
அரசு பேருந்துகளில் பெண் பயணியை ஒருமையில் தகாத வார்த்தையில் திட்டிய அரசு பேருந்து ஓட்டுநர். அரசு பேருந்தில் பெண்களுக்கு மரியாதை இல்லையென பெண் பயணி குற்றச்சாட்டு.


செங்கல்பட்டு அடுத்த கற்பகவிநாயகா மருத்துவமனை பேருந்து நிலையில் பெண் பயணி விஜயலட்சுமி மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சில முதியவர்கள் மதுராந்தகம் அரசு பேருந்தில் ஏறியுள்ளனர்.

மதுராந்தகம் அரசு பேருந்து ஓட்டுநர் ஏய் நாய்களா பொறம்போக்கு
வேற பேருந்துகளே இல்லையா என ஒருமையில் பேசி தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நேர பதிவாளர் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால் விஜயலட்சுமி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் மௌவுனமாய் அதிகாரிகள் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து விஜயலட்சுமி தெரிவிக்கையில் அரசு பேருந்தில் மகளிர்களுக்கு மரியாதை இல்லையெனவும்,
அரசு பேருந்தில் ஓட்டுநர் தன்னையும் ,
தன்னுடன் பேருந்தில் பயணித்த முதியவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியதாக குற்றாச்சாட்டு தெரிவித்தார்.

அரசு பேருந்தில் பயணிக்கும் பெண்பயணிகளை மரியாதை குறைவாகவும், மரியாதை இன்றியும்
நடத்துவதாக பெண் பயணி விஜயலட்சுமி குற்றச்சாட்டு
தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி