வாலாஜாபாத் அருகில் இடிதாக்கி விவசாயி உயிரிழப்பு

71பார்த்தது
வாலாஜாபாத் அருகில் இடிதாக்கி விவசாயி உயிரிழப்பு
வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற விவசாயி தனது விவசாய நிலத்திற்கு சென்றிருந்தபோது இரவு 9 மணி அளவில் இடி தாக்கி விவசாய நிலத்தில் மயங்கி விழுந்தார்.
உடன் இருந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் காஞ்சிபுரம் எடுத்து வந்தபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவ பரிசோதனை தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து ஒரகடம் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

இடி தக்கி விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி