மாமல்லபுரம் நகர திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் 102 வது பிறந்த நாளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உபகரண பொருட்களை வழங்கிய திமுகவினர்
முன்னாள் தமிழக முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான மு கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகர திமுக மற்றும் இளைஞரணி சார்பில் கலைஞரின் 102 வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது மாமல்லபுரம் நகர செயலரும், காஞ்சி வடக்கு மாவட்ட பொருளாளருமான விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தம் அருகே திமுகவினருடன் கழக கொடியை ஏற்றி வைத்து முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம் பேனா பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்களை திமுகவினர் வழங்கினர் நிகழ்ச்சியில் இளைஞரணி பொறுப்பாளரும் மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலருமான மோகன் குமார் திமுக பொறுப்பாளர் அருண்குமார் நகராட்சி கவுன்சிலர் பூபதி உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.