காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட 71, 000 விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு தொகை, 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இழப்பீடு தொகை வழங்காமல் காப்பீடு நிறுவனமும், அதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் வேளாண் துறை அதிகாரிகளும் அலட்சியமாக நடந்து கொள்வதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.