குறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

56பார்த்தது
குறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் மாநகராட்சி, நசரத்பேட்டை, அறிஞர் அண்ணா தெரு வழியாக பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி மைதானம், கன்னிகாபுரம், தாட்டித்தோப்பு உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறுபாலம் உள்ளது.

இந்த பாலத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாததால், கால்வாயில் சென்ற வெள்ளநீரால் கால்வாய் மீதுள்ள சாலை சேதம் அடைந்துள்ளது.

இதனால், சாலையோரம்செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனங்கள் கால்வாய் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, குறு பாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைப்பதோடு, சேதமடைந்த சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி