செங்கல்பட்டில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

61பார்த்தது
தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு நாள் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டில் தீயணைப்பு துறையின் மூலம்
தீ தொண்டு வாரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் கொடியசைத்து வாகன பேரணியை துவக்கி வைத்தார்


செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை
மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் தீயணைப்புத்துறை வீரர்கள் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட பலர் வாகன பேரணியில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட 11 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 14 முதல் 20 வரை தீ விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ தொண்டு வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகள் கல்லூரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் என்றும் மாவட்ட அலுவலர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி