செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரத்தி மற்றும் மதுரா கிராமத்தில், உழவர்களைத் தேடி வேளாண்மை முகாம், சமுதாய கூடத்தில் நேற்று நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி, வேளாண்மை துறை திட்டங்கள், தொழில்நுட்ப உதவிகள், இடுபொருட்கள் பெறுதல் பற்றி எடுத்துரைத்தார். பின், தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, மண்புழு உரம் தயாரிக்க பயன்படும் தார்ப்பாய், மருந்துகள் மற்றும் உளுந்து வகைகள் வழங்கப்பட்டன. இதில், வேளாண்மை அலுவலர்கள், ஒரத்தி சுற்றுவட்டார விவசாயிகள் பங்கேற்றனர்.