செங்கல்பட்டில் பரவலாக பலத்த மழை

63பார்த்தது
செங்கல்பட்டில் பரவலாக பலத்த மழை
செங்கல்பட்டில் ஒரு மேணி நேரத்திற்க்கும் மேலாக பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கன மழை.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வந்தது கோடை முடிந்த பிறகும் வெப்பம் சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகின்றது இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இடி மின்னல்களுடன் கன மழை பெய்து வருகின்றது

அந்த வகையில் பரனூர் சிங்கப்பெருமாள் , மறைமலைநகர் கோவில், வல்லம், ஆலப்பாக்கம், அனுமந்தபுத்தேரி, ராமபாளையம், திம்மாவரம், உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.

ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக இடை விடாத தொடர் கன மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அதன் சுற்று வட்டார பகுதியில் பெய்து வரும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி