மேட்டுக்குப்பம் குளம் பாழ் சீரமைக்கும் பணி எப்போது?

59பார்த்தது
மேட்டுக்குப்பம் குளம் பாழ் சீரமைக்கும் பணி எப்போது?
திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள குளம், 2013ம் ஆண்டு ஆழப்படுத்தி, பக்கவாட்டு சுவர், நான்கு பக்கம் நடைபாதை அமைக்கப்பட்டது.

நீராதாரமாக மேம்படுத்தப்பட்ட இக்குளத்தில் எப்போதும் நீர் நிரம்பி இருக்கும்.

ஆனால், முறையான பராமரிப்பு இன்றி, குளம் முழுதும் ஆகாயத்தாமரை நிறைந்தும், கோரைபுற்கள் வளர்ந்தும் காணப்படுகின்றன.

மேலும், நடைபாதை மற்றும் கரையோரங்களில் முட்செடிகள் வளர்ந்து, படித்துறைகள் சேதம் அடைந்துள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி