தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை, வழக்கில் இருவர் கைது

58பார்த்தது
தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை, வழக்கில் இருவர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகேயுள்ள கட்டவாக்கம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தவர் மூதாட்டி சுகுணா(65).


இவர் தனது வீட்டின் முதல் மாடியில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மே மாதம் 27 ஆம் தேதி இரவு வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு இறந்து கிடந்த நிலையில் அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தன.

இது குறித்து சுகுணாவின் மகளும் சென்னை திருநின்றவூரில் வசித்து வருபவருமான பாரதி என்பவர் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
ஆதாயக் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு புகாரின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.




விசாரணையில் வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்த க. மோகன்(26), கும்ப கோணம் தாராசுரம் பெரியகாலணியை சேர்ந்த பெரியண்ணாபிரபு(24)என்பதையும் காவல்துறையினர் தெரிந்து கொண்டு அவர்களை தேடிய போது இருவரும் கட்டவாக்கம் ஏரிக்கரையில் மறைந்திருந்தனர்.
தனிப்படையினர் கட்டவாக்கம் ஏரிக்கரையில் குற்றவாளிகளை பிடிக்க முயன்ற போது இருவரும் தப்பி ஓடியுள்ளனர். தப்பி ஓடியதில் பிரபுக்கு இடது காலிலும், மோகனுக்கு இடது கையிலும் காயம் ஏற்பட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you