ஒண்டிக்குடிசை குளக்கரையில் கற்கள் பதிக்கும் பணி அரைகுறை

63பார்த்தது
ஒண்டிக்குடிசை குளக்கரையில் கற்கள் பதிக்கும் பணி அரைகுறை
காஞ்சிபுரம் மாவட்டம்
மதுரமங்கலம் அடுத்த, துளசாபுரம் ஊராட்சியில், ஒண்டிக்குடிசை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், குளக்கரை சீரமைக்கப்பட்டு உள்ளது.

அதன் மற்றொரு பகுதி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. குளத்தின் மற்றொரு இரு பகுதிகளிலும் கற்கள் பதிக்கவில்லை. இதனால், மழைக்காலத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, நடப்பு நிதி ஆண்டில் ஒண்டிக்குடிசை குளத்தின் இருபுறமும் கற்கள் பதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், 'ஆய்வு செய்து பணி பட்டியலில் சேர்த்து, தடுப்பு கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தொடர்புடைய செய்தி