வேடந்தாங்கலில் பறவைகள் எண்ணிக்கை குறைந்தது

62பார்த்தது
வேடந்தாங்கலில் பறவைகள் எண்ணிக்கை குறைந்தது
மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு, பங்களாதேஷ், பர்மா, இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஆண்டுதோறும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வலசை வருகின்றன.

மார்ச், ஏப். , மே மாதங்களின் கடைசி வாரத்தில், பறவைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும்.

கடந்த 2023- - 24-ல், கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தை குத்தி நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான், மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட, 35க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்தன.

அப்போது, 40, 000த்திற்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து, 2 மடங்காக மீண்டும் தங்கள் தாய் நாட்டிற்கு புறப்பட்டு சென்றன.

இரவு நேரத்தில் கூட்டம், கூட்டமாக சரணாலயத்தில் இருந்து, தங்கள் தாய் நாட்டிற்கு பறவைகள் சென்ற வண்ணம் உள்ளன.

தற்போது, 1, 000த்துக்கும் குறைவான பறவைகளே உள்ளன. தற்போது, சைபீரியா, ஆஸ்திரேலியா, மியான்மர் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வர்ண நாரை, கூழைக்கடா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா உள்ளிட்ட பறவை இனங்களே தற்போதும் தங்கியுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி