செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், ஜே. சி. கே. நகர், வேதாசலம் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழைக்காலங்களில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கும்.
இதை தவிர்க்க, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ள பாதிப்பு பகுதிகளில், கால்வாய்கள் துார்வாரி சீரமைக்க, பொது நிதியிலிருந்து, 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிக்கு, 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரருக்கு பணி ஆணையை, நகராட்சி நிர்வாகம் வழங்கியது.
அதைத் தொடர்ந்து, வேதாசலம் நகர், ராகவனார் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய், ஜே. சி. பி. , இயந்திரம் வாயிலாக துார்வாரும் பணி, நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'வடகிழக்கு பருவமழையையொட்டி, நகராட்சி பகுதியில், மழைநீர் கால்வாய் துார்வாரும் பணி துவங்கியுள்ளது. இந்த பணிகள் 10 நாட்களுக்குள் முடிக்கப்படும்' என்றனர்.