சாக்கடை நீர் ஓடும் சாலைகள் காஞ்சியில் சுகாதார சீர்கேடு

78பார்த்தது
சாக்கடை நீர் ஓடும் சாலைகள் காஞ்சியில் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் வடக்கு மற்றும் மேற்கு மாட வீதி இணையும் இடத்தில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 10 நாட்களாக 'மேன்ஹோல்' வழியாக வெளியேறி சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், காமாட்சியம்மன் கோவில், ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

காமாட்சியம்மன் கோவில் வடக்கு மாட வீதியில் இருந்து செங்கழுநீரோடை வீதி வரை, சிறு ஓடைபோல சென்ற கழிவுநீரால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.

காஞ்சிபுரம் பி. எஸ். கே. , தெரு மும்முனை சந்திப்பில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரத்திற்கும் மேலாக சாலையில் வழிந்தோடிய கழிவுநீர் சேக்குபேட்டை நடுத்தெரு, பாண்டுரங்க சுவாமி கோவில், சாலியர் தெரு வரை சென்றதால், பேருந்து நிலையம், காந்தி சாலை, காமராஜர் சாலை, ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதிக்கு சென்ற பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் தாத்திமேடு பகுதியில், நான்கு நாட்களாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகின்றன.

தொடர்புடைய செய்தி