ரோபோட்டிக் வடிவமைப்பு எஸ். ஆர். எம். , பள்ளி சாம்பியன்

255பார்த்தது
ரோபோட்டிக் வடிவமைப்பு எஸ். ஆர். எம். , பள்ளி சாம்பியன்
சர்வதேச ரோபோட் ஒலிம்பியாட் சங்கம், உலக அளவில் முன்னேற்றப்பட்ட ரோபோட்டிக் கல்வி வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. இச்சங்கம், 'எதிர்கால கண்டுபிடிப்பாளர்கள்' என்ற தலைப்பில், இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில், இந்திய அளவில் உலக ரோபோட்டிக் ஒலிம்பியாட் போட்டியை, உ. பி. , மாநிலம், நொய்டா நகரில் நடத்தியது. நாடு முழுதுமிருந்து 206 அணிகள் பங்கேற்றன. இதில், செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் எஸ். ஆர். எம். , பொதுப்பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ஜனாவர்ஷன், ஒன்பதாம் வகுப்பு மாணவர் சரணஷ் சிங்னியா ஆகியோர் உருவாக்கிய படைப்பு, காட்சிக்கு வைக்கப்பட்டது. காற்று சக்தி மற்றும் குறைக்கப்பட்ட செயல்திறன் தொழில்நுட்பத்தில், நிலையான மற்றும் இயக்குதிறன் கொண்டு வடிவமைக்கப்பட்ட ரோபோ, போட்டி நடுவர்களால் முதலிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றது.

தொடர்புடைய செய்தி