செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் பழைய சாலை மற்றும் ராட்டிணங்கிணறு பகுதியில், குடியிருப்பு, ரயில்வே போலீசார் குடியிருப்பு மற்றும் தனியார் திருமண மண்டபம், மருத்துவமனை, கடைகள் உள்ளன.
இப்பகுதியில், சாலையின் இருபுறமும் பல ஆண்டுகளுக்கு முன், மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. இதை முறையாக, நகராட்சி நிர்வாகம் பராமரிக்காததால், கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால், வீடுகள் மற்றும்கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையிலேயே தேங்கி, கொசு உற்பத்தி இடமாக மாறியுள்ளது. இவ்வழியாக செல்லும் மக்கள், கழிவு நீரில் நடந்து செல்கின்றனர்.
இதனால், டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும்அபாயம் உள்ளது.
எனவே, அப்பகுதியினரின் நலன் கருதி, மழைநீர் கால்வாய் கட்டவும், சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றி, சுகாதார பணிகள் செய்ய, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.