புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் மண்டபத்தை மக்களை திரட்டி திறக்க உள்ளோம்
செங்கல்பட்டு தெற்கு மாவட்டத்தின் சார்பில் அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் உள்ள அரசால் புதியதாக கட்டப்பட்டுள்ள தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவு இடத்தை செங்கல்பட்டு தெற்கு மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மணி மண்டபத்தை சீர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், புரட்சி பாரதம் கட்சியின் மாநில நிர்வாகி அதே சேகர்
செய்தியாளரிடம் பேசும் பொழுது கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடியார் தாத்தா ரெட்டைமலை சீனிவாசனுக்கு அச்சரப்பாக்கம் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறும் நிலையில் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக
திமுக ஆட்சி வந்து இரண்டு வருடத்திற்கு மேலாகியும் இதை திறப்பதற்கான நடவடிக்கையில் மேற்கொள்ளவில்லை. தற்பொழுது சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. மணிமண்டபத்தை அரசு திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் எஞ்சியுள்ள பணிகளை புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பணிகள் செய்து மற்றும் மக்களை திரட்டி மணிமண்டபத்தை திறந்து அரசிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறோம். என்று கூறினார்.