தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் நடந்த மாரத்தான் போட்டியை, செங்கல்பட்டு தி. மு. க. , - எம். எல். ஏ. , வரலட்சுமி, சப் - கலெக்டர் - பயிற்சி ஆனந்தகுமார் சிங் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
ஆண்களுக்கான போட்டிகள், செங்கல்பட்டு கலெக்டர் வளாகத்தில் துவங்கி, ஒழலுார் வரை சென்று, மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதேபோல், பெண்களுக்கான போட்டிகள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் துவங்கி, வேதநாராயணபுரம் தனியார் கல்லுாரி வரை சென்று, கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில், 5 கி. மீ. , மாரத்தான் ஓட்டத்தில் 860 பெண்களும், 10 கி. மீ. , ஓட்டத்தில் 340 ஆண்களும், 8 கி. மீ. , ஓட்டத்தில், 360 ஆண்களும் பங்கேற்றனர். இந்த போட்டியில், 1, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், முதலிடம் பெற்ற நான்கு நபர்களுக்கு, தலா 5, 000 ரூபாயும், இரண்டாம் இடம் பெற்ற நான்கு பேருக்கு, தலா 3, 000 ரூபாயும், மூன்றாமிடம் பிடித்த நான்கு பேருக்கு, தலா 2, 000 ரூபாயும் வழங்கப்பட்டன.