கிழக்கு கடற்கரை சாலையில் கடலோரம் மற்றும் சாலை பகுதிகளில் ஆபரேஷன் சாகர் கவாஜ் 217 போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
செங்கல்பட்டு மாவட்ட எல்லையான திருவிடந்தை போலீஸ் சோதனை சாவடி முதல் மரக்காணம் வரை 217 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
இதில் கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் தனி படகுகளில் சென்று கடலில் உள்ள சந்தேகப்படும்படியான படகுகளில் வருபவர்களை மடக்கிப்பிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு கடலோரத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர்
இந்த ஒத்திகையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மீனவர் படகு உதவியுடன் இந்த ஒத்திகை நடைபெற்றது
சாலையில் வரும் வாகனங்கள் பேருந்துகள் சந்தேகப்படும்படியான கார்கள் உள்ளிட்டவை சோதனை மேற்கொள்ளப்பட்டது.