செங்கல்பட்டில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மனு

80பார்த்தது
தமிழக முதலமைச்சர் அவர்கள் கவன ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுசெங்கல்பட்டு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. 

இதில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் தமிழக அரசு கேபிள் டிவி சிறப்பு தாசில்தார்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக செட்டாப் பாக்ஸ் கொள்முதல் செய்யாமல் இருப்பதாலும் பழைய செட்டாப் பாக்ஸில் ஒளிபரப்பப்படும் சேனல்கள் அடிக்கடி தடை ஏற்படுவதாலும் அரசிடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு கேபிள் டிவி தாசில்தார்களை கண்டித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் குப்பன் ஆகியோர் தலைமையில் பேரணியாக சென்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில் அனைத்து ஆபரேட்டர்களும் நிம்மதியாக தொழில் செய்ய தமிழகம் முழுவதும் ஆப்ரேட்டர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மனுவில் இருந்தது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஆபரேட்டர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி