மறைமலை நகர் துணை மின் நிலையத்தில் இருந்து காட்டாங்கொளத்துார், மறைமலை நகர், திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு துணை மின் நிலைய வளாகத்தில் இருந்த மின்மாற்றி திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. மறைமலை நகரில் உள்ள 21 வார்டுகளிலும் மின் தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது.
தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் புதிய மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இந்த பணிகள் நடைபெற்று, இரவு 11: 20 மணிக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
மின்மாற்றி வெடித்ததில், நான்கு மணி நேரத்துக்கும் மேலாக மின் வினியோகம் தடைபட்டது.