ஊராட்சி பொது பயன்பாட்டு நிலங்கள் ஆக்கிரமிப்பு... ஜோர்!

56பார்த்தது
ஊராட்சி பொது பயன்பாட்டு நிலங்கள் ஆக்கிரமிப்பு... ஜோர்!
சென்னையின் புறநகர் பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு, மறைமலைநகர், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, திருப்போரூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அதிகளவில் தனியார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இங்கு, பணிபுரிபவர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள், அதிகளவில் வீட்டுமனைகளை வாங்கி வருகின்றனர். இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு, திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில், விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளன.

இந்த நிலங்களை தனியார் நிறுவனங்கள் விலைக்கு வாங்கி, வீட்டுமனைகளாக பிரித்து, டி. டி. சி. பி. , சி. எம். டி. ஏ. , ஊராட்சி நிர்வாகம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்று விற்பனை செய்கின்றன.

இதில், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர் ஆகிய தாலுகா பகுதிகளில், வீட்டுமனைகள் அதிகளவில் உள்ளன. இதை தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிறுவனங்களைச் சேர்ந்தோர் பொது பயன்பாட்டிற்காக, பூங்கா அமைப்பதற்கான இடத்தை, ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்கு ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலங்களுக்கு பட்டா மாற்றம் செய்ய, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஆணையாளர்கள், செயல் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டேக்ஸ் :