பொங்கல் பரிசு தொகை மற்றும் மகளிர் உரிமை தொகை கிடைக்கபெறாத பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது எப்படி என கேள்வி
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மேலேரிபாக்கம் ஊராட்சியில் நியாயவிலை கடையில் பொங்கள் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் துவக்கிவைக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டதால் 100 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்க நியாயவிலை கடை முன் குவிந்தனர்
இந்நிலையில் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் துவக்கிவைக்கப்பட இருந்த நிகழ்ச்சி முன்னறிவிப்பின்றி வேறு இடம் மாற்றப்பட்டதால்
2 மணிநேரம் காத்திருந்து ரேஷன் கடை திறக்கபடாமல் இருந்ததால் பொதுமக்கள் மிகவும் ஆத்திரமடைந்தனர். மேலும் மகளிர் உரிமை தொகை கிடைக்க பெறாத மகளிர் கூறுகையில் வருடந்தோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை, இந்தாண்டு வழங்கப்படவில்லையென்றும் பலருக்கு மகளிர் உரிமை தொகையும் கிடைக்கவில்லை எப்படி நாங்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது என காட்டத்துடன் கேள்வியெழுப்பி நியாய விலை கடை முன் அமர்ந்து கூச்சலிட்டனர்.