கடப்பாக்கம் கடற்கரை பகுதியில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம்

71பார்த்தது
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கடற்கரை பகுதியில் 82 ஆம் ஆண்டு மாசி மக தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது


செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
கடப்பாக்கத்தில் துரோபதி அம்மன் கோவில், பராசக்தி கோவில், ஈஸ்வரன் கோவில், காசிவிஸ்வநாதர் கோவில், நரசிம்மபெருமாள் கோவில்மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான விளம்பூர், கரும்பாக்கம், கோட்டைக்காடு, வெண்ணாங்குப்பட்டு, கடுக்களூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் கடற்கரைப் பகுதிக்கு வந்து, நீராடி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, கடற்கரையில் நீராடி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி