காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, பெருநகர் அடுத்த, கூழமந்தல் கிராமத்தில், பேசும் பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் மூலவர் பேசும் பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை 6: 00 மணிக்கு, உற்சவர் பேசும்பெருமாள் வீதியுலா வந்தார். மூன்றாவது வாரத்தையொட்டி, நேற்று காலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை ஏரிவாய் கிராமத்தில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி நேற்று மாலை 6: 00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, இரவு 7: 00 மணிக்கு, மணவாளப் பெருமாள், ஏரிவாய் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வீதியுலா வந்தார்.
காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில் உள்ள ராதா, ருக்மணி சமேத கோபாலகிருஷ்ண பஜனை கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம் நடந்தது.