நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜி. எஸ். டி. , சாலையில், ஆங்காங்கே சிறு பள்ளங்கள் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வந்தனர்.
மேலும், தற்போது பெய்த மழையின் காரணமாக, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் மீண்டும் அதிகமாகின. அவற்றை சீரமைக்கக் கோரி, நகராட்சி தலைவர் கார்த்திக், கமிஷனர் தாமோதரன் ஆகியோருக்கு, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
கூடுவாஞ்சேரி ஜி. எஸ். டி. , சாலை, தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், சீரமைத்து தர வேண்டும் என, நகராட்சி தலைவர், கமிஷனர் ஆகியோர், நெடுஞ்சாலை துறையினருக்கு பரிந்துரை செய்தனர்.
அதன் அடிப்படையில், நேற்று, நெடுஞ்சாலைத் துறையினர், கூடுவாஞ்சேரி ஜி. எஸ். டி. , சாலையில் தேங்கியுள்ள சிறு கற்களை அகற்றியும், பள்ளங்களை தார் கொண்டு நிரப்பி சமன் செய்தும், பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.