செங்கல்பட்டு:கொக்கிலமேடு மீனவ கிராமத்தில் ஊரை விட்டு விலக்கப்பட்ட மீனவர்கள், பாதுகாப்பு வழங்கக் கோரி, ஏ.டி.எஸ்.பி., இடம், நேற்று மனு அளித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், கொக்கிலமேடில், இருதரப்பு மீனவர்களுக்கிடையே சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டது. ஒரு தரப்பைச் சேர்ந்த மீனவ குடும்பத்தை ஊரை விட்டு விலக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று, கொக்கிலமேடு மீனவ கிராமத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜாத்தி மற்றும் 7 மீனவ குடும்பத்தைச் சேர்ந்த மீனவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், ஏ.டி.எஸ்.பி., வேல்முருகளிடம் மனு அளித்தனர்.