கீழம்பி சத்திரகுளக்கரை பலப்படுத்தும் பணி தீவிரம்

61பார்த்தது
கீழம்பி சத்திரகுளக்கரை பலப்படுத்தும் பணி தீவிரம்
காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பி ஊராட்சியில், சென்னை -- பெங்களூரு சாலையை ஒட்டி, சத்திரகுளம் உள்ளது. இக்குளம் அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாகவும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தாகம் தீர்க்கும் தடாகமாகவும் விளங்கி வருகிறது. இக்குளத்தின் கரையை பலப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை பணியாளர்களின் வாயிலாக குளக்கரை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி