குடிநீர் தொட்டி பீடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

64பார்த்தது
குடிநீர் தொட்டி பீடத்தை சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம் மாநகராட்சி 23வது வார்டு வரதராஜபுரம் தெருவில், அப்பகுதி மக்களின் கூடுதல் குடிநீர் ஆதாரமாக மாநகராட்சி சார்பில், ஆழ்துளை குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
இப்பகுதியினர் வீட்டு உபயோக கூடுதல் குடிநீர் தேவைக்கு குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பீடம் சேதமடைந்து உடைந்த நிலையில் உள்ளது.
இதனால், குடிநீர் தொட்டிக்கும் பீடத்திற்கும் பிடிப்பு இல்லாமல் உள்ளதால், பலத்த காற்றடித்தால் குடிநீர் தொட்டி விழுந்து உடையும் சூழல் உள்ளது.


எனவே, சேதமடைந்த குடிநீர் தொட்டியின் பீடத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வரதராஜபுரத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி