செய்யூரில் 25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம்

78பார்த்தது
செய்யூரில் 25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என 25 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். செய்யூர் தாலுகாவில் 84 ஊராட்சிகள் உள்ளன. 

செய்யூர் தாலுகாவில் கல்லூரிகள் இல்லாததால் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவியர்கள், செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் வரையில் நீண்ட பயணம் மேற்கொண்டு கல்லூரிகளுக்கு சென்று நிலை இருந்து வருகிறது. 

நாள் ஒன்றுக்கு 30 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை பயணம் செய்து, தங்களது கல்லூரி படிப்பை படித்து வருகின்றனர். இந்தநிலையில் 25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறி இருப்பது, அப்பகுதி மக்களிடையே மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி